

காலச்சூழல் ஏஜென்ட் செயலாக்கத் தொடரின் அடிப்படைத் தர்க்கம் எளிமையானது.
உள்ளீட்டைத் துண்டுகளாகப் பிரியுங்கள்
ஒரு ஆவணத்துடன் தொடங்குங்கள் (நிர்வாகக் குழு உரையாடல் பதிவு அல்லது ஆண்டு அறிக்கை போன்றது). அதை எளிதில் கையாளக்கூடிய பகுதிகளாகப் பிரியுங்கள் (பேச்சாளரின் ஒவ்வொரு உரை முறை அல்லது பத்திகள் போன்றவை).
கூற்றுகளைப் பிரித்தெடுங்கள்
ஒவ்வொரு துண்டிலிருந்தும், “நிறுவனம் X சந்தையில் முன்னணியில் உள்ளது” என்பது போன்ற தெளிவான, தனித்து அர்த்தம் தரும் கூற்றுகளைப் பிரித்தெடுங்கள்.
வகையைக் குறியிடுங்கள்
உண்மை (புறவயமான உண்மை)
கருத்து (அகவயமானது)
கணிப்பு (முன்னறிவிப்பு அல்லது மதிப்பீடு)
நிலையானது (குறிப்பிட்ட நேரத்தில் உண்மையானது)
மாறக்கூடியது (காலப்போக்கில் மாறக்கூடும்)
காலத்துக்கு அப்பாற்பட்டது (என்றும் மாறாத உண்மை)
காலநிலையைப் புரிந்துகொள்ளுங்கள்
கூற்று எப்போது உண்மையானது என்பதையும், தேவைப்பட்டால் அது எப்போது உண்மையற்றதாக ஆனது, அதாவது எப்போது செல்லாததாக்கப்பட்டது என்பதையும் ஏஜென்ட் கண்டறிகிறது. இது கூற்றிலுள்ள தகவலின் செல்லுபடியாகும் காலத்தைக் குறிக்கிறது. அது, அந்தக் கூற்று வெளியிடப்பட்ட அல்லது சொல்லப்பட்ட நேரத்திலிருந்து வேறுபடலாம்.
முரண்பாடுகளைச் சரிபாருங்கள் (செல்லாததாக்குதல்)
ஒரு புதிய கூற்று பழையதுடன் முரண்பட்டால், செல்லாத தகவலை அறிவுத் தளத்திலிருந்து முற்றிலும் அகற்றுவதற்குப் பதிலாக, பழைய பதிவு காலாவதியானதாகக் குறிக்கப்பட்டு புதிய பதிவுடன் இணைக்கப்படும்.
இந்தச் செயல்முறை தானியக்கமானதும் தடமறியக்கூடியதும் ஆகும். எனவே என்ன மாறியது, ஏன் மாறியது என்பதை எப்போது வேண்டுமானாலும் ஆழமாக ஆராயலாம்.


நல்ல செய்தி என்ன? உங்கள் முழு அமைப்பையும் மறுவடிவமைக்க வேண்டியதில்லை. காலச்சூழல் ஏஜென்ட்களைப் பெரும்பாலும் உங்கள் தற்போதைய RAG அல்லது அறிவுச் செயலாக்கத் தொடர் கட்டமைப்பிலேயே நேரடியாக ஒருங்கிணைக்கலாம்.
முக்கியக் கூறுகள்:
பொருள் சார்ந்த துண்டாக்கம்: மூல உரையை அர்த்தமுள்ள பகுதிகளாகப் பிரித்தல்.
LLM சார்ந்த உண்மைப் பிரித்தெடுப்பு: உண்மைகளை அடையாளம் காணவும், தேதிகளைக் கண்டறியவும், நிகழ்வு வகைகளைக் குறியிடவும் LLM-களைப் பயன்படுத்துதல்.
காலச்சூழல் வகைப்பாடு: கூற்றுகளைக் கால அடிப்படையில் வகைப்படுத்தவும், அவை செல்லுபடியாகும் கால வரம்புகளைத் தீர்மானிக்கவும் LLM-களைப் பயன்படுத்துதல்.
காலச்சூழல் செல்லாததாக்கத் தர்க்கம்: கைமுறைப் பதிப்பு நிர்வாகமின்றி, புதிய உண்மைகள் பழையவற்றைத் தானாகப் புதுப்பிக்கவோ காலாவதியாக்கவோ முடியும்.
மும்மை அடிப்படையிலான சேமிப்பு: அறிவு வரைபடங்கள் அல்லது வரைபட அடிப்படையிலான தரவுத்தளத்தைப் பயன்படுத்தும்போது, ஒவ்வொரு உண்மையும் [எழுவாய்]—[செயல்]—[செயப்படுபொருள்] + [தொடக்க நேரம், முடிவு நேரம்] எனச் சேமிக்கப்படும்.
சரியான அமைப்பிருந்தால், சிறிய குழுக்கள்கூட சில வாரங்களில் முன்மாதிரியிலிருந்து உற்பத்தி நிலைக்குச் செல்லலாம். பெரிய மாடல்களைக் (GPT-4.1) கொண்டு முன்மாதிரியை உருவாக்கி, அது நிலையானதும் வேகமான பதிப்புகளுக்கு (GPT-4.1-mini அல்லது nano) மாறலாம். இதைப் பற்றிய விரிவான தொழில்நுட்ப விளக்கத்திற்கு, அறிவு வரைபடங்களுடன் காலச்சூழல் ஏஜென்ட்களைப் பயன்படுத்துவதற்கான OpenAI செய்முறைக் கையேட்டைப் பார்க்கவும்.


இப்போது காலச்சூழலை உணரும் உங்கள் அறிவு வரைபடம் தயாராகிவிட்டது; அதிலுள்ள தரவையும் நீங்கள் நம்பலாம். இந்த வலுவான தரவு அடித்தளத்தை வணிக மதிப்பாக எப்படி மாற்றலாம்?
பெரிய அறிவுத் தளங்களிலிருந்து வேண்டிய தகவலை மீட்டெடுப்பது சவாலாக இருக்கலாம். பலபடி மீட்டெடுப்பு ஏஜென்ட்கள் இதற்கு உதவலாம். உங்கள் வினாவுக்குப் பதிலளிக்க மிகவும் பொருத்தமான தகவலைக் கண்டறிய, இந்த அமைப்புகள் ஒன்றோடொன்று தொடர்புடைய பல வினாக்களின் வழியாக அறிவுத் தளத்தை நுண்ணறிவுடன் ஆராய முடியும்.
உங்கள் அமைப்பு வளரும்போது, செயல்திறனைத் தக்கவைப்பதும் மேம்படுத்துவதும் முக்கியமாகிறது. திட்டமிடும் கூறுகளைச் சேர்ப்பது மீட்டெடுப்பைச் சீராக்கி, அதன் செயலாக்கத் தொடரின் பிந்தைய கட்டங்கள் முக்கியமானவற்றில் கவனம் செலுத்த உதவும். உங்கள் மைய அமைப்பு அணுகக்கூடிய தேடல் மற்றும் பகுப்பாய்வுக் கருவிகளை மேம்படுத்துவதும் பலனளிக்கும். வேகத்தையோ தரத்தையோ இழக்காமல் பெரிய அறிவு வரைபடங்களில் சிக்கலான வினாக்களை இயக்க இது உதவும்.
அதிகப் பயன்பாடுள்ள நிறுவல்களில், வரைபட ஆராய்வை இணையாகச் செயல்படுத்துதல், அடிக்கடி பயன்படுத்தப்படும் வினாப் பாதைகளை இடைநினைவகத்தில் சேமித்தல், ப்ராம்ப்ட்களை மேலும் செம்மைப்படுத்துதல் மற்றும் நுண்சீராக்குதல் ஆகியவை செயல்திறனைக் கணிசமாக உயர்த்தும்.
காலச்சூழல் ஏஜென்ட்டை உருவாக்குபவர்களுக்காக, அறிவு வரைபடங்களுடன் காலச்சூழல் ஏஜென்ட்களைப் பயன்படுத்துவது குறித்த முழுமையான தொழில்நுட்ப வழிகாட்டியை எங்கள் OpenAI செய்முறைக் கையேட்டில் திறந்த மூலமாக வெளியிட்டுள்ளோம். பிரித்தெடுப்புத் தர்க்கம் முதல் பலபடி ரீஸனிங் வரை அனைத்தையும் அது விளக்குகிறது. அவற்றில் அடங்குபவை:
முழுமையான நிரலும் செயலாக்கத் தொடர் வரைபடங்களும்
மாடல் வழிகாட்டலும் மதிப்பீட்டு உத்திகளும்
முன்மாதிரியிலிருந்து உற்பத்தி நிலைக்கு அளவாக்குவதற்கான சிறந்த நடைமுறைகள்
செயற்கை நுண்ணறிவு உங்கள் உலகைப் புரிந்துகொள்ளும் விதத்தைக் காலச்சூழல் ஏஜென்ட்கள் மாற்றுகின்றன. நிலையான உண்மைகளின் தொகுப்பாக அல்லாமல், உயிரோட்டத்துடன் தொடர்ந்து உருவாகும் கதையாக அதைப் புரிந்துகொள்ளச் செய்கின்றன.
உங்கள் முடிவுகள் என்ன நடந்தது என்பதை மட்டுமல்ல, அது எப்போது நடந்தது என்பதையும் சார்ந்திருந்தால், காலச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நேரம் இது.
அதை நீங்கள் தனியாக உருவாக்க வேண்டியதில்லை. உங்கள் அமைப்புகள் சூழலை இன்னும் சிறப்பாக உணரவும், முடிவெடுக்கத் தயாராக இருக்கவும் அல்லது மெய்நிலையுடன் மேலும் ஒத்துப்போகவும் விரும்பினால், உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்.